"நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு விரைவில் மாற்று குடியிருப்பு" - தமிழக அரசு

நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு மாற்றுவீடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு விரைவில் மாற்று குடியிருப்பு - தமிழக அரசு
x
நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு மாற்றுவீடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை சிஐடி காலனி அரசு குடியிருப்பை கட்டி வெகுநாட்கள் ஆகிவிட்டதால், அதை இடித்துவிட்டு புதிய குடியிருப்பை கட்ட முடிவெடுத்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குடியிருப்பில் வசித்து வந்த நல்லகண்ணு வீட்டை காலி செய்த நிலையில், கக்கன் குடும்பத்தினர் இன்னும் வீட்டை ஒப்படைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.. இருவருக்கும் விரைவில் மாற்று குடியிருப்பு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்