இன்று சர்வதேச செவிலியர் தினம் : கேக் வெட்டி கொண்டாடிய செவிலியர்கள்

சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று சர்வதேச செவிலியர் தினம் : கேக் வெட்டி கொண்டாடிய செவிலியர்கள்
x
பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதத் தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி,  சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.  முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில், மெழுகுவர்த்தி ஏந்தி, செவிலியர் பணியை முழு மனதோடு செம்மையாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்