கோடை விடுமுறையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவில் குவியும் மக்கள்
பதிவு : மே 12, 2019, 02:27 PM
கோடை விடுமுறையையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா நோக்கி படையெடுத்து வரும் மக்கள், அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், செல்போன்களிலும், தொலைக்காட்சிகளிலும் குழந்தைகள் மூழ்கி கிடக்கின்றனர். அவர்களை திசை திருப்புவதற்காக, பெற்றோர், கடற்கரை, சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் வாட்டி வதைக்கும் வெயிலால் கடற்கரையை தவிர்த்து, சென்னை வாசிகள் அருகே உள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து செல்கின்றனர். அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை, அன்றாடம் குளியல், ஊட்டச்சத்துடைய உணவு வகைகள் என பூங்கா ஊழியர்கள் நன்றாக கவனித்து வருகின்றனர்.

ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒப்பிடும்போது கிண்டி பூங்காவில் பறவைகளும், உயிரினங்களும் குறைவாக உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்தும் பூங்காவிற்கு மக்கள் வருகை தருவதால், பூங்காவின் தரத்தையும், உயிரினங்களின் எண்ணிக்கையையும் உயர்த்திட வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

திருமணம் செய்து தர மறுத்ததால் பெண்ணின் தாய் கத்தியால் குத்தி கொலை

நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், பெண்ணின் தாயை, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

278 views

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி - ஆளுநர் பன்வாரிலால், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

24 views

பிரபல நடிகர் 'பாபி சிம்ஹா' குடிபோதையில் தகராறு

தனியார் உணவு விடுதிக்கு வந்த பாபி சிம்ஹாவுக்கும் அவரது நண்பர் கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது

3049 views

பிற செய்திகள்

பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நினைவு தினம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன் வசீகரக் குரலால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவு தினம்

20 views

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் - ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுடன் சந்திப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

80 views

சேலம் : செக்கானூர் கதவணை பராமரிப்பு பணி தொடக்கம்

சேலம் மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேட்டூர், செக்கானூர் கதவணை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

15 views

நெல்லை: என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

8 views

குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது.

14 views

அரசு பள்ளிகளை பாதுகாக்க சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தாம்பரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் தொடங்கியது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.