மாதக்கணக்கில் நீடிக்கும் குடிநீர் பற்றாக்குறை : காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் மாதக்கணக்கில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் மாதக்கணக்கில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக வாரம் ஒரு முறை விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், மாதம் ஒரு முறை என்ற கணக்கில் விநியோகிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் எரசக்கநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சின்னமனூர் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தார்.
Next Story

