காதலனை ஆள் வைத்து கடத்திய காதலி..
பதிவு : மே 12, 2019, 08:48 AM
நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்த காதலனை, காதலியே ஆள் வைத்து கடத்தி அடித்து உதைத்த சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர், நவீத் அகமது. அமெரிக்கா வாழ் இந்திய இளம்பெண் ஒருவரும், நவீத்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன், படம் பார்த்து விட்டு, தனது என்.ஆர்.ஐ. காதலியை சேத்துப்பட்டில் உள்ள அவரது குடியிருப்பில் இறக்கி விட்டு திரும்பிய நவீத் அகமதுவை, மூன்று பேர் கொண்ட கும்பல்  கடத்திச் சென்றது. கத்திபாரா பாலத்துக்கு கீழே நவீத் அகமதுவை அந்தக் கும்பல் அடித்து உதைத்துள்ளது. உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பணம் இல்லை என்று நவீத் அகமது கூறியதும், அவரது செல்போனை றித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியுள்ளது.

இதுதொடர்பாக டி.பி. சத்திரம் காவல்நிலையத்தில் நவீத் அகமது புகார் அளித்தார். மர்மநபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போலீசிடம் நவீத் கூறவே, அதை வைத்து மூன்று பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர், சரவணன் மற்றும் லெனின் ஆகியோர் தான் நவீத்தை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. லெனின் தப்பிய நிலையில் மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நவீத்தைக் கடத்தச் சொன்னதே, அவரது அமெரிக்க காதலி தான் என்ற தகவலை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். 

காதலன் நவீத், அடிக்கடி தகராறு செய்வதாகவும், தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் அமெரிக்க பெண் கூறியிருக்கிறார்.  எனவே செல்போனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கடத்திச் சென்றதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்க பெண்ணிடமும் நடத்திய விசாரணையில் இது உறுதிபடுத்தப்பட்டது.

இதில் தலைமறைவாக இருக்கும் லெனின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பாஸ்கர் என்பவர், வடபழனி மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் மகன் என்பதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போலீசார் வைத்திருந்த தடுப்புகளை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற கும்பலிலும் இவர்  இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. காதலனின் செல்போனை பறிக்க, காதலியே அவரை ஆள் வைத்து கடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4202 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4306 views

பிற செய்திகள்

"திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணா" - சுப வீரபாண்டியன் தகவல்

இந்திய நாடாளுமன்றத்தில் திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணாத்துரை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழாரம் சூட்டியதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறினார்.

3 views

கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு : 2 துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

40 views

மறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்

சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

19 views

"எந்த மொழியையும் வெறுக்கக்கூடாது" - உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேச்சு

'எந்த ஒரு மொழியையும், வெறுக்க கூடாது' என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.

20 views

ஊட்டி மலர் கண்காட்சியில் ஆடை அலங்கார போட்டி : 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

ஊட்டி மலர் கண்காட்சியின் 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

8 views

ஏரி பாதுகாப்பு விழிப்புணர்வு பலூன் : நடிகை ரோகிணி, அபி நந்தன் தந்தை பங்கேற்பு

ஏரி பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறுவர்களுடன் இணைந்து நடிகை ரோஹிணி, பலூன் பறக்கவிட்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.