சிசிடிவி கேமரா விழிப்புணர்வு குறித்த குறும்படம் வெளியீடு - செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு

சி.சி.டி.வி கேமராக்கள் குற்றவாளிகளுக்கு வைக்கப்பட்ட செக்மேட் என பிரபல செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
சிசிடிவி கேமரா விழிப்புணர்வு குறித்த குறும்படம் வெளியீடு - செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு
x
சி.சி.டி.வி கேமராக்கள் குற்றவாளிகளுக்கு வைக்கப்பட்ட செக்மேட் என பிரபல செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். சிசிடிவி கேமராவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தயாரான மூன்றாவது கண் என்ற விழிப்புணர்வு குறும்படத்தின், குறுந்தகட்டினை, செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வெளியிட்டார். இதை பெற்றுக்கொண்ட  சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகரத்தில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என்ற நிலையயை எட்டிவிட்டதாக கூறினார். குற்றம் நடந்த உடனேயே அதை கண்டுபிடிக்க உதவி புரியும் சாதனமாக சி.சி.டி.வி மாறி உள்ளதாக குறிப்பிட்ட விஸ்வநாதன், அடுத்த பரிணாம வளர்ச்சியாக குற்றவாளிகளின் முகத்தை பதிவு செய்து, காவல் நிலையத்திற்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் வரும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்