தனியார் தோட்டத்தில் பதுக்கிய 342 யூனிட் மணல் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கப்பட்ட 342 யூனிட் ஆற்று மணலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தனியார் தோட்டத்தில் பதுக்கிய 342 யூனிட் மணல் பறிமுதல்
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கப்பட்ட 342 யூனிட் ஆற்று மணலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மூலனூர் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் ஆற்று மணல் பதுக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் அங்கு சென்று சோதனை நடத்தி உள்ளார். இதில்,  342 யூனிட் ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்யததுடன், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 5 லாரிகள் மற்றும் 2 ஜே.சி.பி இயந்திரங்களையும் பறிமுதல் செய்தார். மணல் பதுக்கியது ​தொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளதாகவும், விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மணல் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் சார் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்