ஆட்டோ ஒட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை...
பதிவு : மே 11, 2019, 03:53 AM
பட்டபகலில் சிவகங்கை சிபி காலனியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் மர்ம கும்பலால், ஒடஒட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
சிவகங்கை சிபி காலனியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கண்ணன் என்பவர் பிற்பகல் 12 மணி அளவில் திருப்பத்தூர் சாலையில் உள்ள இலந்தன்குடிபட்டி கண்மாய் அருகே ஆட்டோவில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.  அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆட்டோ டிரைவர் கண்ணனை வெட்ட  முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட கண்ணன் கண்மாய்க்குள் இறங்கி தப்பி ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் கண்ணனை தொடர்ந்து விரட்டிச் சென்று தலை மற்றும் இடது கைகளில்  வெட்டி விட்டு தப்பியுள்ளது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த சிவகங்கை போலீசார், கண்மாய்க்குள் கிடந்த கண்ணன் உடலை கைபற்றி , உடற்கூறு ஆய்​வுக்காக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் இளைஞர் ஒருவர், மர்ம கும்பலால், ஒடஒட விரட்டி வெட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு : 4 பேர் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தியின் கொலை வழக்கில் நான்கு பேரை ஆர்கே நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

31 views

சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம்.

25 views

55,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் சாலையில் கிடந்த 55 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

295 views

கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டையில் நடராஜர் சிலை : கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னையில் கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டைக்குள் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

472 views

பிற செய்திகள்

காவிரி விவகாரம் : "கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்" - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

26 views

கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

21 views

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

31 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

9 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

82 views

அலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.