சாதுர்ய நடிப்பால் எஸ்கேப் ஆன பலே திருடன்...
பதிவு : மே 11, 2019, 02:27 AM
சென்னையில் ஆடி காரை திருடிய காவலாளி, ஆறு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில் எஸ்கேப் ஆகியுள்ளான்...
சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையை சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் பரத்குமார்... இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சாகர்குமார் என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.  கோடை விடுமுறைக்காக, பரத்குமார் தனது குழந்தைகளுடன் அமெரிக்கா சென்ற நிலையில், சமயம்பார்த்து காத்திருந்த காவலாளி சாகர்குமார், கடந்த சனிக்கிழமை அன்று இரவு வீட்டில் இருந்த ஆடி காரை திருடி சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பரத்குமாரின் தம்பி ஆகாஷ் குமார், கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த ஆறு நாட்களாக , பல இடங்களில் தேடியும், ஆடி கார் திருடி சென்ற சாகர்குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்காத‌தால் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது... குடி போதையில் ஒருவர் ஓட்டி வந்த ஆடி காரை பிடித்து வைத்துள்ளதாக, எழும்பூர் காவல்நிலையத்தில் இருந்து, கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் சென்றது. திருடன் சிக்கிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் சென்ற கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு மற்றொரு டுவிஸ்ட் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளான் அந்த பலே திருடன்.

எழும்பூர் போலீசாரிடம் மதுபோதையில் மாட்டிகொண்ட சாகர்குமார், போதையில் இருந்தாலும், போலீசாரை பார்த்தவுடன் சாதுர்ய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை கார் உரிமையாளர் போல காட்டிகொண்ட சாகர்குமார், கார் நிற்கட்டும், நான் காலையில் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பல லட்சம் மதிப்புள்ள காரை நிறுத்திவிட்டு செல்கிறார், எப்படியும் வந்துவிடுவார் என்று நம்பிய எழும்பூர் போலீசாருக்கு, அந்த காரை சாகர்குமார் திருடி வந்த‌து தெரிந்திருக்கவில்லை. கீழ்ப்பாக்கம் போலீசார் தகவல்களை கூறிய பிறகே,  தாங்கள் திருடனை கோட்டை விட்டுவிட்டோம் என்பது எழும்பூர் போலீசாருக்கு புரிந்துள்ளது. கார் திரும்ப கிடைத்துள்ளது, பரத்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளித்தாலும்,  சிக்கிய திருடனை கைவிட்ட போலீசாருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5544 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4551 views

பிற செய்திகள்

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

16 views

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25 views

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

18 views

"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

13 views

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.

13 views

சாத்தனூர் அணையின் மதகுகளை ஏற்ற மறுத்த ஊழியர்கள் : விவசாய சங்கத்தினர் ஊழியர்களிடையே தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.