உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி - அரசாணை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது
உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி - அரசாணை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
x
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச் சாவடிகள் அமைப்பது  தொடர்பான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான மாதிரி படிவம் அளிக்கப்பட்டுள்ளது.கிராம ஊராட்சி,  ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அடிப்படையில் வாக்குச்சாவடி வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் 2019 படிவமும் வெளியிடப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் இறுதி செய்வதற்கு 3 மாதம் கால அவகாசம் வேண்டுமென்றும், தற்போதைய சூழலில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்