தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் பதவி : வேணுகோபால் நியமனம்

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் பதவி : வேணுகோபால் நியமனம்
x
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராகநியமிக்கப்பட்டுள்ளார். தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் தேர்வுக்குழு, வேணுகோபால் உள்பட 13 பேரை நீதித்துறை உறுப்பினராகவும், 18 பேரை தொழில்நுட்ப உறுப்பினர்களாகவும் நியமனம் செய்ய பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று, 31 உறுப்பினர்கள் நியமனத்துக்கு மத்திய நியமனக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறைஉறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகோபால், 2007 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த நிலையில், நேற்று தான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்