பெற்றோரிடம் கோபித்துகொண்டு வெளியேறிய மாணவி சடலமாக மீட்பு

திண்டுக்கலில் வீட்டில் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய கல்லூரி மாணவி ஒருவர் மாநகராட்சி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பெற்றோரிடம் கோபித்துகொண்டு வெளியேறிய மாணவி சடலமாக மீட்பு
x
திண்டுக்கல் மேற்கு அசோக் நகர் பகுதியை சேர்ந்த வாழைசிவந்தி, அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வந்துள்ளார். தேர்வு நெருங்கும் நிலையில் கடந்த ஆறாம் தேதி, வீட்டில் டிவி பார்த்துகொண்டிருந்த மாணவியை, அவரது உறவினர்கள் கண்டித்த‌தாகவும் இதனால் கோபித்துக்கொண்ட மாணவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மகளை காணவில்லை என ஈஸ்வரி திண்டுக்கல் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் உள்ள மாநகராட்சி கிணற்றில் மாணவியை சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்