கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், விதிமுறைகளின் படியே கல்விக்கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
x
மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கல்விக்கட்டணம் குறித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி பல்கலைக்கழகங்களும், தமிழக அரசு விதித்துள்ள விதிமுறையின்படி கல்லூரிகளிலும் விண்ணப்பக்கட்டணம், கல்விக்கட்டணம் ஆகியவற்றை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது என கூறி, வழக்கை  ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்