சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 25,000 வாழை மரங்கள் சேதம்

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
x
ஈரோடு மாவட்டம். நாகவேதன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன மற்றும் பெரியகொரவம்பாளையம், அய்யம் புதூர்,  பழையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. தில், இன்னும் 15 நாட்களுக்குள் அறுடைக்கு தயார் நிலையில் இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. ஏக்கருக்கு 50 முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், தனிநபர்  பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்