திருவண்ணாமலை : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

திருவண்ணாமலை கமண்டலநாகந‌தி ஆற்றில் மணல் திருடி கொண்டிருந்தபோது மண் சரிந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவண்ணாமலை : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்
x
கடந்த 4 ஆம் தேதி ஆரணி அருகே கமண்டல நாகந‌தி என்ற ஆற்றில் மணல் திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, மண் சரிந்த‌தில், அருகில் இருந்த 9 ஆம் வகுப்பு மாணவனை மண் மூடியுள்ளது. இதில் மாணவர் மூச்சு திணறி உயிரிழந்தார். அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பிரகாஷ் என்ற பெயரில் இருவர் ராம்ராஜ் ஏழுமலை என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த‌னர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்