தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா, முழு உரிமை கோர முடியாது என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்
x
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா, முழு உரிமை கோர முடியாது என்று, தமிழக அரசு  தெரிவித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கர்நாடக அரசு தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு தமிழக அரசு தரப்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தென் பெண்ணையாறு, கர்நாடகா மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான ஆறு அல்ல என்றும், இந்த ஆறு தமிழகத்திலும் பெரும்பகுதி ஓடுவதால், கர்நாடகா மாநிலம் இதற்கு முழு உரிமை கோர முடியாது என்றும், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல், கட்டுமான பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்