நீட் தேர்வுக்கு கடைபிடிக்கப்பட்ட சோதனை ஐஏஎஸ்., ஐபிஎஸ். தேர்வுகளில் பின்பற்றப்படுமா? - வைகோ

நீட் தேர்வுக்கு கடைபிடிப்பதைப் போன்ற சோதனைகளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கும் செய்யமுடியுமா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
x
நீட் தேர்வுக்கு கடைபிடிப்பதைப் போன்ற சோதனைகளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கும் செய்யமுடியுமா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு குறித்து தினத்தந்தி நாளிதழ் தலையங்கத்தில் அருமையாக சுட்டிக்காட்டி இருப்பதாகக் கூறினார். பெண்களின் துப்பட்டாவை பறிப்பது, தங்க நகைகளை எடுப்பது, முழு கை சட்டையை வெட்டுவது போன்ற செயல்கள்,  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கும் பின்பற்றப்படுமா எனக் கேள்வி எழுப்பிய வைகோ, இவை கொடுமையான மனிதாபிமானமற்றது என்றார். மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாக வைகோ குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்