"நாட்டிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" : பன்னீர்செல்வம்

அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்தீவிர பிரசாரம் மேற்கொண்டார்
x
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து, துணை முதலமைச்சர்  பன்னீர் செல்வம் அத்தொகுதிக்குட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசஞந்த்தம் , சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டு விரிவாக எடுத்துரைத்தார்.பள்ளப்பட்டி கடை வீதியில் பேசிய பன்னீர் செல்வம் நாட்டிலேயே  தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக கூறினார். சிறுபான்மை மக்களுக்கு அரணாக தமிழகம் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்