அமுதவள்ளியை விசாரிக்க சிபிசிஐடி திட்டம் : காவலில் எடுக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு

குழந்தை விற்பனை விவாகரத்தில் சிறையில் இருக்கும் செவிலியர் அமுதவள்ளி உள்ளிட்ட 8 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அமுதவள்ளியை விசாரிக்க சிபிசிஐடி திட்டம் : காவலில் எடுக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் 30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி சிறையில் உள்ளார். அவருக்கு உதவியாக இருந்த அமுதவள்ளியின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை ஜாமினில் விடுவிக்குமாறு அவர்கள் மூவரும் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. 

இதனிடையே, அமுதவள்ளி உள்ளிட்ட 8 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார், அதற்கு அனுமதி கோரி, நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கேட்டு மனு செய்துள்ள நிலையில், சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள இந்த மனு, அமுதவள்ளி தரப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்