மணல் திட்டுகளை அகற்றி, தூர்வார வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
x
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் நாகை துறைமுக கடல் முகத்துவாரம் மற்றும் கடுவையாற்றின் பல பகுதிகளிலும் உருவாகியுள்ள மணல் திட்டு காரணமாக, இரவில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் மீனவர்களின் பல படகுகள் அதன் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்து விடுகின்றன. இது போன்ற விபத்துகளால் மீனவர்கள் பல லட்சம் மதிப்பிலான படகுகளை இழந்து வருவதோடு, சில சமயங்களில் உயிர்சேதமும் ஏற்படுகின்றன. இந்நிலையில் நாகை துறைமுகத்திலும், கடுவையாற்றிலும் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றி, தூர்வாரி தர வேண்டும் என அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மீன்பிடி தடை காலமான இந்த நாட்களை பயன்படுத்தி, உடனடியாக மணல் திட்டுகளை அகற்றி, தூர்வாரி தர வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்