ராமதாசை போட்டியாகக் கருதவில்லை - திருமாவளவன்

ராமதாசை போட்டியாக கருதவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
ராமதாசை போட்டியாகக் கருதவில்லை - திருமாவளவன்
x
ராமதாசை போட்டியாக கருதவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கொள்கை அடிப்படையில்தான் பாஜக, பாமக கட்சிகளை எதிர்க்கிறோம் என்று குறிப்பிட்டார். தனிப்பட்ட முறையில் பாமக தலைவர் ராமதாசை போட்டியாக கருதவில்லை என்றும், வன்னிய சமூக இளைஞர்களுக்கு கல்வி அறிவு கொண்டு செல்வதற்கு பதில் வன்முறையை தூண்டும் வகையில் வழிநடத்துவதைத்தான் எதிர்க்கிறோம் என்றும் கூறினார். திருமாவளவன் பெயரை உச்சரித்தல் தான் இங்கு சில கட்சிகளுக்கு அரசியல் பிழைப்பு நடத்த முடிகிறது என்றும் விமர்சனம் செய்தார்

Next Story

மேலும் செய்திகள்