வி.ஏ.ஓ. வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை - நகை, பணம், எல்.இ.டி. டி.வி. திருட்டு

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வெளியூர் சென்றிருந்த கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
வி.ஏ.ஓ. வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை - நகை, பணம், எல்.இ.டி. டி.வி. திருட்டு
x
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வெளியூர் சென்றிருந்த கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தை  சேர்ந்த வி.ஏ.ஒ. சர்மிளா, தனது கணவர் மதன்குமாருடன் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அருகில் வசிப்பவர்கள் அளித்த தகவலை தொடர்ந்து, மதன்குமார் ஊர் திரும்பியுள்ளார். அப்போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 3 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எல்.ஈ.டி டிவியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்