நகர்புற இளைஞர்களில் 60 % பேருக்கு வேலையில்லை...ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நகர்புறங்களில் 20 முதல் 24 வயதுள்ள இளைஞர்கள் 60 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாக அசீம் பிரேம்ஜி பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
x
அசீம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் நிலையான வேலை வாய்ப்புகளுக்கான ஆய்வு மையம் சார்பில், இந்தியாவில் வேலையில் இருப்பவர்களின் நிலை என்கிற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில்,  இந்தியாவில் வேலையின்மை குறித்த விவரங்கள் தொழிலாளர்களின் நிலை போன்ற விவரங்கள் துல்லியமாகக்  கிடைப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படுவதில்லை. வேலையின்மை பற்றிய தேசிய  மாதிரி ஆய்வு அமைப்பின் அறிக்கை 2011 -12 ஆம் ஆண்டு வெளியானது. அதுபோல தொழிலாளர் பணியகத்தின் அறிக்கை 2015 க்கு பிறகு வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. 2016-18 ஆம் ஆண்டு கால கட்டத்தில் 50 லட்சம் பேர் வேலையிழந்தனர். வேலை வாய்ப்புகள் குறைய தொடங்கிய அந்த கால கட்டத்தில்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ள்பட்டது.

18  வயது முதல் 23 வயதுள்ளவர்களில், உயர் கல்விக்கு சேர்பவர்களின் விகிதம் 2006 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது.  2016 ஆம் 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்புற ஆண்களில், 20 முதல் 24 வயதில் இருப்பவர்கள் விகிதம் 13 புள்ளி 5 சதவீதமாக உள்ளது. இவர்களில் 60 சதவீதம் பேருக்கு  வேலையில்லை. நகர்புற ஆண்களில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் 2016 ஆம் ஆண்டில் 69 புள்ளி 1 சதவீதத்தில் இருந்து, 3 புள்ளி 6 சதவீதம் குறைந்து,
2018 ஆம ஆண்டில் 65 புள்ளி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

உற்பத்தி துறையில் 1980 ஆம் ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால்  80 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட்டன. 2015 ஆண்டுகளில் இது 10 க்கும் குறைவான வேலைகளை தான் உருவாக்குகிறது. வணிகவியல், கலைகள் மற்றும் அறிவியல்  படித்த பட்டதாரிகளினால், நவீன பொருளாதார அமைப்பில் வேலை செய்ய முடிவதில்லை.

நகர்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க,  ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை போல், நகரப்புற பகுதிகளுக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அளிக்க வேண்டும். நகர்புற வேலைக்கு தினக்கூலி 500 ரூபாய் என்று நிர்ணயம் செய்து, பல்வேறு வகை வேலை திட்டங்களை அளிக்கலாம் என்றும் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்