நாளை, "நீட்" தேர்வு : கட்டுப்பாடுகள் என்ன ?

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான "நீட்" தேர்வு, நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
நாளை, நீட் தேர்வு : கட்டுப்பாடுகள் என்ன ?
x
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான "நீட்" தேர்வு, நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மாணவர்கள் முழு கை சட்டை அணியக்கூடாது - ஷூ, சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மாணவிகள் தலையில் கிளிப், மூக்குத்தி , காது வளையம் அணிய கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் 2019 - 20 ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தாண்டுக்கான " நீட் " தேர்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு துவங்கி, மாலை 5 மணிக்கு நிறைவு பெறும். தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வில், சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்