நிபந்தனையில் கையெழுத்திட வந்தவர்கள் மீது தாக்குதல் : காவல் ஆய்வாளருக்கு அபராதம்

நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றவர்களை தாக்கிய போலீசாருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நிபந்தனையில் கையெழுத்திட வந்தவர்கள் மீது தாக்குதல் : காவல் ஆய்வாளருக்கு அபராதம்
x
நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றவர்களை தாக்கிய போலீசாருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த டி.எஸ். பசுபதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், நிபந்தனைப்படி, அரசியல் உள்நோக்கத்துடன் குடும்பத்தினர் மீது 6 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். முன்ஜாமின் வழங்கிய நீதிமன்ற நிபந்தனைப்படி, திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றபோது, விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் தாக்கியதாக கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த மனித உரிமை ஆணையம், விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராஜூக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் மற்றும் காவலர் கண்ணனுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தவிட்டுள்ளது. போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவில் பரிந்துரைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்