பிரபல சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து...

மீனம்பாக்கத்தில் சினிமா படப்பிடிப்பு மைதானத்தில் உள்ள அரங்குகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சென்னை மீனம்பாக்கத்தில் சினிமா படப்பிடிப்பு மைதானத்தில் உள்ள அரங்குகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூடப்பட்டதால், அங்கு சினிமாவுக்கு செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தப்பட்டு  வருகிறது. இந்த நிலையில் பகல் 2 மணியளவில் அங்குள்ள படப்பிடிப்பு தளம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனாலும் தீயை கட்டுபடுத்த முடியாததால் மெட்ரோ குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

Next Story

மேலும் செய்திகள்