மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு

மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் சரிபாதி சரிந்துள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு
x
கஜா புயலின் போது பெய்த மழையின் காரணமாக அணை முழுக் கொள்ளளவான 57 அடியை எட்டி நிறைந்திருந்தது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாமல் வறண்டு விட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் 36.50 அடிக்கு கீழ் சரிய தொடங்கியுள்ளது. கோடையின் தொடக்கத்திலேயே நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்