கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு : மே 8 முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், மே 8 முதல் ஜூன் 10 வரை, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு : மே 8 முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
x

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், மே 8 முதல் ஜூன் 10 வரை, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 8 முதல்,  ஜூன் 10 வரை இணையதளம்  வழியாக விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பதிவு செய்யும் விண்ணப்ப நகலுடன், உரிய சான்றிதழ்களை சேர்த்து ஜூன் 10 மாலை 5 மணிக்குள் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. தரவரிசைப் பட்டியல் ஜூன் 24-ல் வெளியிடப்பட்டு, ஜூலை 9-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பி.வி.எஸ்.சி. எனப்படும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 360 இடங்களும்,  பி.டெக்.,  படிப்பில் 100 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்