வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் என புகார்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலை சேர்ந்த நிர்மல்ராஜ் என்பவர், வெளிநாட்டு வேலைக்காக தனது நண்பர்கள் லாரன்ஸ் மற்றும் பெல்டனிடம் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் என புகார்
x
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலை சேர்ந்த நிர்மல்ராஜ் என்பவர், வெளிநாட்டு வேலைக்காக தனது நண்பர்கள் லாரன்ஸ் மற்றும் பெல்டனிடம் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து பெல்டன் வெளிநாட்டு சென்று மீண்டும் இரண்டரை லட்ச ரூபாய் கேட்டதை அடுத்து, அந்த பணத்தை நிர்மல்ராஜ் கொடுத்தாக தெரிகிறது. வேலை கிடைக்க தொடர்ந்து தாமதப்படுத்தியதால் நிர்மல்ராஜ் பணத்தை திருப்பி கேட்டபோதெல்லாம் இருவரும் மழுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த ஊருக்கு வந்த பெல்டனிடம் நேரில் சென்று பணத்தை வழங்குமாறு, நிர்மல்ராஜ் கேட்டுள்ளார். அப்போது லாரன்ஸும், பெல்டனும் பணத்தை திருப்பி தரமுடியாது என்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் நிர்மல்ராஜ் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்