அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - சஞ்சய் தத் நம்பிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - சஞ்சய் தத் நம்பிக்கை
x
கடந்த 2004 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என அகில இந்திய  காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் கரூர் செங்குந்த புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சி அச்சப்படுவதாகவும், அதன் காரணமாகவே சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் மீதான நடவடிக்கையை தற்போது கையில் எடுத்துள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்