கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது
அரியலூர், திருச்சி, கடலூா், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 400க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 150 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு சீறிபாய்ந்த காளைகளை அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
Next Story