நாகேஸ்வரர் கோயிலில் அதிசய நிகழ்வு - சூரியன் மூலவரை வழிபடும் காட்சி

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் சூரியன் மூலவரை வழிபடும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.
நாகேஸ்வரர் கோயிலில் அதிசய நிகழ்வு - சூரியன் மூலவரை வழிபடும் காட்சி
x
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் சூரியன் மூலவரை வழிபடும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. சித்திரை மாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வை காண, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்திருந்தனர். 

நாகாத்தம்மன்  மற்றும் நவக்கிரக  சன்னதிகளுக்கு குடமுழுக்கு
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் பர்மா தமிழர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பிலிக்கான் முனீஸ்வரர் கோவிலில் உள்ள நாகத்தம்மன் மற்றும் நவக்கிரக சன்னதிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக சாலைபூஜைகள் நடத்தப்பட்டு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு, சிவாச்சாரியர்கள் கலசத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, வாத்தியங்கள் முழங்க  இரண்டு சன்னதி  கோபுரங்களுக்கும் சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றினர். பின்னர், வரும் மே 5 ம் தேதி நடைபெற உள்ள தீமிதி திருவிழாவிற்கான  கொடியேற்றம் நடைபெற்றது. 

பேச்சியம்மன், இசக்கியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பேச்சியம்மன், இசக்கியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சித்தி விநாயகர் கோயிலில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனித நீர், ஆலய கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பேச்சியம்மன், இசக்கியம்மன், சுடலைமாடசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

நாராயண சுவாமி ஆலய பிரம்மோற்சவ விழா - தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள நாராயண சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனைகள் காட்டப்பட்டன. பின்னர், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

வன்னிய பெருமாள் கோயில் பிரமோற்சவம்

புதுச்சேரி வன்னிய பெருமாள் கோயில், பிரம்மோற்சவ விழாவையொட்டி கருடசேவை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கோவிந்தா... கோவிந்தா..என  கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் கருடாழ்வார் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, மாடவீதியில் உலா வந்தார்.

மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி

நாகப்பட்டினம் முச்சந்தி மாரியம்மன் கோயில் பிரமோற்சவ விழாவையொட்டி, பூச்சொரிதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 
வெளிப்பாளையம் சிவன் கோயிலில் இருந்து திரளான பெண்கள், பூத்தட்டு ஏந்தியவாறு முச்சந்தி மாரியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 


Next Story

மேலும் செய்திகள்