ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 150 கிலோ மதிப்புள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலை மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு
x
கோங்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக கட்டிடப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடித்தளம் அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் நிலத்தை தோண்டியுள்ளனர். அப்போது அம்மன் சிலை, சிலைக்கான பீடம் மற்றும் கிரீடம் கிடைத்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த சிலைகளின் மொத்த எடை 150 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அரசு அருங்காட்சியகத்தில் சிலைகள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்