வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை

சென்னை கொருக்குப்பேட்டையில் வீட்டில் மறைத்து வைத்து பொட்டலம் பொட்டலமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதி ஜான்சன், சேனியம்மாளை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை
x
கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் தீவிரமாக நடத்திய சோதனையில் ஜான்சன் வீட்டில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை மூட்டையாக எடுத்து வந்து, 100 கிராம் அளவில் சிறுசிறு பாக்கெட்டுகளாக தயாரித்து 100 ரூபாய் 200 ரூபாய்க்கு இளைஞர்களிடமும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து,  
அவர்களின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்