இந்தியாவில் உயர்கல்வி படித்தும் வேலையில்லை - ஆய்வறிக்கையில் தகவல்
பதிவு : ஏப்ரல் 26, 2019, 01:22 PM
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.
* 2016 ஆம் ஆண்டில் கிராமங்களில் 100 பேரில் 68 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்றால் தற்போது 64 ஆக அது குறைந்துள்ளது.  நகர்புற வேலை வாய்ப்பு  2016 ஆம் ஆண்டில் 100-க்கு 72 பேருக்கு வேலை கிடைத்தது என்றால், தற்போது 68 ஆக குறைந்துள்ளது. நகர்புறங்களில் உயர்கல்வி முடித்துவிட்டு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 76 லிருந்து 78 ஆக அதிகரித்துள்ளது. 12ஆம் வகுப்புக்கும் குறைவான கல்வித் தகுதி கொண்டவர்களின் எண்ணிக்கை 72-இல் இருந்து 68 ஆகம் குறைந்துள்ளதுடன் அவர்களின் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது.

* வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் அதிகரித்துள்ளன, பட்டப்படிப்பு முடித்தவர்களில் வேலையற்றோர் எண்ணிக்கை 16 புள்ளி 3 சதவீதமாக உள்ளது. முதுநிலை பட்டம் பெற்றவர்களில் 14 புள்ளி 2 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. தென் மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்கின்றனர். சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் 1000 பேருக்கு  476-இல் இருந்து 560 பெண்கள் வேலைக்குச் செய்கின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 326-இல் இருந்து 400 பெண்கள் வேலைக்கு  செல்கின்றனர். 

* 2000ஆம் ஆண்டில் தொழில் திறன் 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றால், ஊதிய உயர்வு 1 புள்ளி 5 சதவீத அளவிலேயே உள்ளது. இந்த போக்கு 2016ஆம் ஆண்டிலும் தொடர்கிறது. 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் தொழில் நிறுவனங்களில் மேலாளர்களின் ஊக்க ஊதியங்கள் 1 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. பெருவாரியான மக்களுக்கு உத்திரவாதமான மற்றும் நிலையான வருமானம் இல்லை என்றும், தொழில் பாதுகாப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4201 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4305 views

பிற செய்திகள்

கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு : 2 துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

9 views

மறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்

சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

9 views

"எந்த மொழியையும் வெறுக்கக்கூடாது" - உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேச்சு

'எந்த ஒரு மொழியையும், வெறுக்க கூடாது' என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.

9 views

ஊட்டி மலர் கண்காட்சியில் ஆடை அலங்கார போட்டி : 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

ஊட்டி மலர் கண்காட்சியின் 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

6 views

ஏரி பாதுகாப்பு விழிப்புணர்வு பலூன் : நடிகை ரோகிணி, அபி நந்தன் தந்தை பங்கேற்பு

ஏரி பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறுவர்களுடன் இணைந்து நடிகை ரோஹிணி, பலூன் பறக்கவிட்டார்.

7 views

இடைத் தேர்தலால், மதுக்கடை அடைப்பு : 2 மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.