"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். நெல்லை அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வர உள்ளதாகவும், புதிதாக 15 பாடப்பிரிவுகள் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்