தண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது?

ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை
x
தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளாக காட்சியளிக்கின்றது ஒட்டப்பிடாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள். இந்த பகுதியை சுற்றியுள்ள பகுதியில் மல்லிகை சாகுபடி மிகவும் அதிகமாக நடந்து வருகிறது. மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். மழை இல்லாத காலத்தில் கூலி வேலைக்கும், நூறு நாள் வேலை திட்டத்திற்கும் செல்லும் நிலைக்குக்கும் விவசாயிகள்  தள்ளப்பட்டுள்ளனர்.மாசானம், ஒட்டப்பிடாரம்

தண்ணீருக்காக அப்பகுதி மக்களின் கனவான கொம்பாடி ஓடை மற்றும் ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டம் 30 ஆண்டுகளாக கோரிக்கை அளவிலேயே உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கால்வாய் இணைக்கப்பட்டால் ஒட்டப்பிடாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைகாலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் நீரை குளங்களில் தேக்கி சேமிக்க முடியும் என்கிறார்கள். 

இந்த பகுதிகளுக்கு குடிநீர் வசதிக்காக தாமிரபரணியிலிருந்து சீவலப்பேரி வழியாக குடிநீர் கொண்டுவரும் திட்டம் இருந்தாலும், சில இடங்களுக்கு அதுவும் வந்து சேரவில்லை என்று தெரிவிக்கின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டுவர, தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பின் மூலம் வெள்ளநீர் வடக்குகால் திட்டம் செயல்படுத்த திட்டம் வரையறை செய்யப்பட்டது.

இந்த திட்டத்துக்கு 540 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 250 கிராமங்கள் ஆற்றுப் பாசனம் செய்யக் கூடிய வகையில் செழிப்பாக மாறும். சுமார் 600 க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என இவர்கள் நம்புகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்