ஜெயலலிதா சொத்து - வருமான வரித்துறை தகவல்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா சொத்து - வருமான வரித்துறை தகவல்
x
ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான 900 கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், 1990-91 முதல் 2011-12 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு 10 கோடியே 12 லட்ச ரூபாய் வரி பாக்கி உள்ளது  என்றும்,  2005-06 முதல் 2011-12 ஆம் ஆண்டு வரை 6 கோடியே 62 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜுன் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்