தம்பியை சுட்டுகொன்ற "பில்லா ஜெகன்"
தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவர் பில்லா ஜெகன், தனது உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவர் பில்லா ஜெகன், தனது உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தம்பிகள் இடையே சொத்துபிரச்சினை காரணமாக நீடித்த மோதலில், உடன்பிறந்த தம்பி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுகொன்ற அண்ணன், பில்லா ஜெகன், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவர். தூத்துக்குடி மாவட்டம் சின்னக்கடை தெரு பகுதியை சேர்ந்தவர் பில்லா ஜெகன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார். அதை விட, தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவர் பில்லா ஜெகன் என்றே பெரும்பாலும் அடையாளம் காட்டப்படுபவர். அந்த அளவிற்கு விஜய் ரசிகர்களிடையே மிகவும் பரிட்சயமான நபர். பில்லா ஜெகனின் பின்புலம் குறித்து அலசியபோது, இவர் மீது ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
தனது சகோதரியை காதலித்ததாக சச்சின் என்ற இளைஞரை கொன்றதாக பில்லா ஜெகன் மீது, அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளார் பில்லா ஜெகன்.
பில்லா ஜெகனுக்கும் அவரது சகோதரர் சிம்சனுக்கும் சொத்து தொடர்பாக கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது, இருவருக்கும் மோதல் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தான் வைத்திருந்த துப்பாக்கியால், தம்பியை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். துப்பாக்கி குண்டுகள் முழங்கும் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பில்லா ஜெகன் தப்பி ஓடிவிட்டார்.
மொத்தம் 3 குண்டுகள். காலை துளைத்துகொண்டு 2 குண்டுகள் வெளியே வந்துள்ளன. ஒரு குண்டு மர்ம உறுப்பில் பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் சிம்சன். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பாதி வழியிலே உயிரிழந்தார் சிம்சன். தப்பி ஓடிய பில்லா ஜெகனை தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
அரசியல் ரீதியாகவும், விஜய் மக்கள் மன்றத்திலும் முக்கிய பொறுப்பில் உள்ள நபர், சொத்து பிரச்சினை காரணமாக உடன்பிறந்த தம்பியையே சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story