"4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னம்" - உச்ச நீதிமன்றத்தில் தினகரன் சார்பாக மனு

4 தொகுதி இடைத் தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தினகரன் முறையிட்டுள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னம் - உச்ச நீதிமன்றத்தில் தினகரன் சார்பாக மனு
x
தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, மக்களவை தேர்தலில் ஒதுக்கியது போலவே, பரிசு பெட்டகம் சின்னத்தை மீண்டும் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தினகரன் சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் நாளை முறையிட உள்ளார்.ஏற்கனவே, அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்