சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு - வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வீராணம் ஏரி நீரை 70 சதவீதம் பயன்படுத்த குடிநீர் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு - வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்
x
சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளில் வெறும் 465 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு  உள்ளது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து, அதை குழாய்கள் மூலம் சென்னைக்கு எடுத்து வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், இந்தாண்டில் மட்டும் வீராணம் ஏரி 3-வது முறையாக அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. இதைதொடர்ந்து, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தேவையான குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடைக்காலம் முழுவதும் சமாளிக்கும் வகையில், வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் எடுக்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏரியின் மொத்த கொள்ளளவில் இருந்து  70 சதவீத தண்ணீரை சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம்,  சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளித்து விடலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்