ராஜராஜ சோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜ ராஜசோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
x
தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன் நினைவிடம், ஒரே ஒரு சிவலிங்கத்துடன் புதையுண்ட நிலையில், உடையாளூர் என்னும் கிராமத்தில் உள்ளது. அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அந்த இடத்தை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்திய தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் 10 பேர் குழு, தற்போது ராஜராஜன் நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  நவீன கருவி பொருத்திய தானியங்கி விமானம் மூலம் பூமிக்கு அடியில் உள்ளதை ஆய்வு செய்யும் பணியை ஆய்வுக் குழு மேற்கொண்டுள்ளது. முதல் கட்ட ஆய்வு இன்று நடைபெறும் நிலையில், நாளையே இரண்டாம் கட்ட ஆய்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மூலம், தஞ்சை பழங்கால வரலாறு, தமிழர் பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்