திருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
திருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.  காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மேகமூட்டம் நிலவியதோடு காற்றும் வேகமாக வீசத்தொடங்கியது. இதனையடுத்து, கரட்டாங்காடு , நல்லூரில் , செட்டிபாளையம்,  முத்தனம்பாளையம் , ராயபுரம் , ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது . சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த  மழையால் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது . இருப்பினும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர் .

நீலகிரி : சுமார்  3 மணிநேரம் கொட்டி தீர்த்த மழை 



நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 3 மணிநேரம் இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனால் சேரிங்கிராஸ், மார்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக படகு சவாரி 4 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது. வேலிவியு, லவ்டேல்தொட்ட பெட்டா உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 

Next Story

மேலும் செய்திகள்