திருவையாறு : பாரம்பரிய நல்லேர் பூட்டும் விழா

வேளாண் பணிகளின் தொடக்கமாக பாரம்பரிய நல்லேர் பூட்டும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவையாறு : பாரம்பரிய நல்லேர் பூட்டும் விழா
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பருத்திகுடி கிராமத்தில் சித்திரை மாத நல்ல நாளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் விதை நெல், பழம், அரிசி வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, ஏர்பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் பூமி பூஜை நடத்தி வர்ணஜப மந்திரங்கள் முழங்க, நெல் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, ஏர் கலப்பையால் உழுத பின், விதை நெல்லை தூவி தங்களது முதல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கினர். மன்னர்கள் காலத்தில் தங்கக் கலப்பையால் ஏர்பூட்டும் நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில் சில கிராமங்களில் மட்டுமே தற்போது நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்