தாயை கொலை செய்த முன்னாள் எம்பியின் மகன்...
பதிவு : ஏப்ரல் 15, 2019, 01:22 PM
சென்னையில் சொத்து தகராறு காரணமாக தாயை கொலை செய்து விட்டு, தப்பியோடிய முன்னாள் எம்.பி.யின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மகன் பிரவீண், இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். அங்கு அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையே, சொத்து பிரச்சினை காரணமாக ஒரு மாதம் முன்பு பிரவீண் தமிழகம் வந்துள்ளார். பிரவீணிடம் சொத்து பிரச்சினை குறித்து பேசுவதற்காக, தாய் ரத்தினம் சென்னையிலுள்ள பிரவீணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில், பிரவீண், தனது தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பியோடிய பிரவீணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

120 views

சென்னை : முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை

சென்னையில் முன் விரோதம் காரணமாக, ரவுடி ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

70 views

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் கிரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி தனது வீட்டை செந்தில் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

138 views

மதுரையில் ஒரே வாரத்தில் நடந்த 5 ஆவது கொலை

மதுரையில் ஒரே வாரத்தில் நடந்த 5 ஆவது கொலை

270 views

பிற செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5 views

குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

மதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

23 views

கோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

கரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

22 views

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

18 views

ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்

வங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

85 views

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

கோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.