காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து நெரித்து கொலை...
பதிவு : ஏப்ரல் 12, 2019, 07:51 AM
சென்னை தாம்பரம் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவரது உறவினரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுவிடுதி கிராமத்தை சேர்ந்த அகிலா  என்ற பெண் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்தார். அகிலாவிற்கும் அவரது அக்காள்  கணவரின் தம்பி சந்தோஷிற்கும்  நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. சந்தோஷ் தனது அண்ணனுடன் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், காந்தி தெருவில் வசித்து வந்துள்ளார். 

* இந்நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனியாக பேச வேண்டும் என்று அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை, அகிலா எழுந்திருக்காததால், காரில் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அகிலாவை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  

* இதனையடுத்து சந்தோஷ் அகிலாவின் உறவினர்களுக்கு தொடர்புகொண்டு, அகிலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், மாடியில் உள்ள கிரில்கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மறுநாள் காலை அவர்  மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
 
* இதனால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , சந்தோஷ் தான் அகிலாவை கொலை செய்து இருப்பார் என சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சந்தோஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். எனினும், உறவினர்களிடம் சொன்னதையே போலீசாரிடமும் சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷிடம் தீவிர  விசாரணை மேற்கொண்டதில், அகிலாவை காதலித்து வந்ததாகவும்,   அகிலா வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் சந்தோஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சந்தோஷை கைது செய்தனர். காதலிக்க மறுத்த ஒரே காரணத்திற்காக இளம்பெண்ணை அவரது உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

970 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5131 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6242 views

பிற செய்திகள்

சிலை கடத்தல் தடுப்பு வழக்கு : சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசாணை ரத்து

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

3 views

எதிர்க்கட்சியினர் சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் - தயாநிதி மாறன்

தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சியினர் செய்த சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் என அக்கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

259 views

"நாட்டின் பாதுகாவலர் தான் பிரதமர் மோடி" - சரத்குமார்

பிரதமர் மோடி நாட்டின் காவலர் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

20 views

கோவையில் தனியார் புகைப்பட ஸ்டூடியோவில் கட்டுக்கட்டாக பணமா ?

தனியார் புகைப்பட நிறுவனத்தில் பணம் பதுக்கல் என தகவல்

39 views

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு 27 விவசாய அமைப்புகள் ஆதரவு

வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் சங்கம் உட்பட 27 விவசாய அமைப்பு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

98 views

"மோடியின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது" - ராஜகண்ணப்பன்

தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சுயநலத்துடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டினார்.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.