8 வழிச்சாலை திட்டம்- அரசாணை ரத்து

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழித்தடங்கள் கொண்ட 277 கிலோ மீட்டர் பசுமை வழிச்சாலைக்கு, சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை  மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரியும் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 35 விவசாயிகளும், பா.ம.க. எம்.பி. அன்புமணி உள்ளிட்டோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தாமல், மத்திய அரசின் சுற்றுச் சூழல் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே, நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவங்கியது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, நிலம் கையகப்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

6 மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கின் விசாரணை, டிசம்பர் 14ம் தேதி முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம் என்றும், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும், திட்டத்திற்கு ஆலோசனை வழங்கிய நிறுவனத்தின் அறிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

8 வழிச்சாலை குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்  


8 வழிச்சாலை தீர்ப்பு : தமிழக அரசுக்கு பின்னடைவு இல்லை - வைகைச்செல்வன்


8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - ஜெயக்குமார் 


8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவசாயிகளுக்கான வெற்றி - அன்புமணி


8 வழிச்சாலை சாலை தீர்ப்பின் அம்சங்கள் என்ன?


Next Story

மேலும் செய்திகள்