ஜெயலலிதா மறைவு குறித்து நான் பேசுவேன் - ஸ்டாலின்

இலவச மின்சாரம், வங்கிக்கடன் தள்ளுபடி, சிறுபான்மை மக்களுக்கு உள் ஒதுக்கீடு என அனைத்து தரப்புக்கும் நல்ல திட்டங்களை வழங்கியது திமுகதான் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
x
இலவச மின்சாரம், வங்கிக்கடன் தள்ளுபடி, சிறுபான்மை மக்களுக்கு உள் ஒதுக்கீடு என அனைத்து தரப்புக்கும் நல்ல திட்டங்களை வழங்கியது திமுகதான் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து அங்கு பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். தமக்கும் சேர்த்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவராக தாம் கேட்க உரிமை உள்ளது என்று கூறிய ஸ்டாலின், அதுபற்றி தம்மை பேசக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் தகுதியில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்