சென்னை முதலை பண்ணை : அபூர்வ இன கியூபா முதலை உயிரிழப்பு

சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கியூபா நாட்டு பெண் முதலை உயிரிழந்தது.
சென்னை முதலை பண்ணை : அபூர்வ இன கியூபா முதலை உயிரிழப்பு
x
சென்னை வடநெம்மேலியில் உள்ள பூங்காவில் உலகளவில் இருக்கும் 23 இனங்களில் 17 வகை முதலைகள் பராமரிக்கப்படுகின்றன. அவைகளில் அபூர்வ இனமான கியூபா நாட்டு முதலைகள் ஒரு ஆண், 4 பெண் முதலைகள் இருந்தன. பெண் முதலைகளில் ஒன்று இறந்துவிட்டது. அருகிலுள்ள நட்சத்திர விடுதியின் புல்வெளியில் நடந்த இசை நிகழ்ச்சி, அதிக ஒலி ஒளி, அதிர்வலைகள் ஆகியவை காரணமாக முதலை இறந்துவிட்டதாக அந்த பூங்காவின் நிறுவனர் ராம் விட்டேகர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது, முதலைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பரிசீலித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். உலகில் அழிந்து வரும் அபூர்வ இனமான கியூபா முதலை இறந்ததை பார்த்து தாம் நொறுங்கி போய்விட்டதாக ராம்விட்டேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்