"எங்கள் கட்சியினரும் பணத்தை செலவு செய்ய சொல்கிறார்கள்" - கமல்

தொற்று நோய் போல பரவியுள்ள பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை என்றும், அவ்வாறு கொடுப்பவர்கள் தனது கட்சியில் இருந்தால் அவர்களை நீக்குவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
x
தொற்று நோய் போல பரவியுள்ள பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை என்றும், அவ்வாறு கொடுப்பவர்கள் தனது கட்சியில் இருந்தால் அவர்களை நீக்குவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரை செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ரஜினி தனக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்ததாகவும், மீண்டும் மீண்டும் அவரிடம் வலியுறுத்துவது முறையல்ல என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, வேலூரில் பணம் பிடிபட்டிருப்பதால், தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்பதை தான், மக்கள் நீதி மய்யமும் பரிந்துரைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்